பொன்பரப்பி குறித்து வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்டால் குண்டாசில் கைது! திகில் கிளப்பும் பொலீஸ்!

பொன் பரப்பி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் வதந்திகள் மற்றும் அவதூறான தகவல்களை பரப்புவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், காவல் ஆணையர்களுக்கு போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு.


பொன்பரப்பி விவகாரம் தொடர்பாக வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரித்தார்

அதையும் மீறி சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நான்கு பேரை கடலூர் போலீசார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சிவக்குமார் என்பவர் மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார்