ஷார்ப் சூட்டிங்! பிரேசிலில் வெற்றிக் கொடி நாட்டிய கடலூர் தமிழச்சி!

பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். இன்னிலையில் அவருக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி நகரில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் என்ற வீராங்கனை சுமார் 251 புள்ளிகளை குறித்து முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற வீரர் வீராங்கனைகள் அவருக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றனர். அவரது பயிற்சியாளர் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றதது தனது தாய் நாட்டிற்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார். இளவேனில் கடலூரை பூர்வீகமாக கொண்டவர். அவர் தற்போது தனது தாய் தந்தையுடன் குஜராத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.