தீராத நோய்! 13வது மாடியில் இருந்து குதித்த 30 வயது ரதி! கீழே நின்ற முதியவர் மேல் விழுந்ததால் நேர்ந்த விபரீதம்!

குஜராத் மாநிலம் கோரக்பூரில் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதோடு முதியவர் ஒருவரையும் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தை சேர்ந்த மம்தா ரதி என்ற 30 வயது பெண் ஒருவர் அகமதாபாத் பகுதியை அடுத்த கோரக்பூர் பகுதியில் தீராத நோயின் காரணமாக தனது சகோதரர் வீட்டில் சிகிச்சை பெற்று வசித்து வந்தார்.

இந்நிலையில் தீராத நோயின் வலி தாங்க முடியாமல் தினந்தோறும் செத்து பிழைத்துள்ளார் மம்தா. பின் வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் மம்தா. இதையடுத்து அவர் வசித்துவந்த பிளாட்டின் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் மம்தா.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவ்வழியாக வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய 59 வயது முதியவர் ஒருவர் மீது அவர் விழ முதியவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.பின் இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.