கண் தெரியாத மாணவி மாறி மாறி பாலியல் துஷ்பிரயோம்..! 2 பார்வையற்ற ஆசிரியன்களின் வெறியாட்டம்! இசைப்பள்ளி பயங்கரம்!

காந்திநகர்: பார்வையற்ற சிறுமி என்றும் பாராமல் பலாத்காரம் செய்துவந்த ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


குஜராத் மாநிலம், அம்பாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மியூசிக் ஸ்கூல் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 15 வயதான பார்வையற்ற சிறுமி படித்து வந்திருக்கிறார். அவரை அங்கு பணிபுரியும் 62 வயதான ஒரு ஆசிரியரும், 30 வயதான மற்றொரு ஆசிரியரும் சேர்ந்து, கடந்த 4 மாதங்களாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தீபாவளி பண்டிகை என்பதால், அந்த சிறுமி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். ஆனால், தீபாவளி முடிந்த பிறகும் திரும்பவும் அம்பாஜிக்குச் செல்ல அவர் மறுத்திருக்கிறார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இதுபற்றி தீவிர விசாரித்தபோது, சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் வெளியில் தெரியவந்துள்ளது.  

இதன்பேரில் சிறுமியை அழைத்துக் கொண்டு போலீசில் அவர்கள் புகார் செய்தனர். வழக்குப் பதிந்த போலீசார் குற்றவாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து வந்த ஆசிரியர்கள் 2 பேருக்குமே கண் தெரியாது என்பதுதான். கண் தெரியாத நபர்களே, தங்களைப் போன்ற பார்வையற்ற சிறுமியை பலாத்காரம் செய்தது வேதனை அளிப்பதாக உள்ளது.