குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த குழந்தைகளுக்கு பெண் ஒருவர் பிஸ்கட் தரும் புகைப் படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இருள் சூழ்ந்த நேரம்! பரபரப்பான சிக்னல்! ஜீன்ஸ் சர்ட்டில் இருந்த பெண் செய்த செயல்! நெகிழ்ந்து போன மக்கள்!
குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்த அந்த பெண் யார் என தெரியவில்லை. அவர் குழந்தைகளுக்கு செய்த அன்பான உபசரிப்பு அனைவர் மனதையும் கவர்ந்து உள்ளது. மனிதக் குலத்தின் சிறந்த வடிவம் இதுதான் கருணை என்பது மனிதக் குலத்தின் சிறந்த வடிவம் என்று அமெரிக்க ஓவியர் டோரிஸ் லீ கூறியிருந்தார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவ் சவுத்ரி இந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டு மகாத்மா காந்தி கூறிய வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இது பலரால் ரீ டிவிட் செய்யப்பட்டு உள்ளது.
காந்தியின் வாசகத்திற்கு பதில் அளிக்கும் வகையில் “உங்களின் உண்மை உருவத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதுதான் என ஒரு பெண் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை ஏராளமான இளைஞர்கள் லைக் செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்த அந்த பெண் வேறு ஒரு சிக்னலிலும் நின்று கொண்டு இருந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் தந்த போது பொதுமக்கள் பார்த்ததாக தெரிவித்து உள்ளனர்.
இது மட்டும் இன்றி தெருவில் ஆதரவின்றி சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கும் பிஸ்கெட் கொடுத்து பசியாற்றி தனது மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நமக்கும் தெரிவிக்கிறது.