19 மாணவர்கள் பலி! டியூசன் சென்டரில் தீ பிடித்தது எப்படி?

19 மாணவர்கள் பலியாகக் காரணமான டியூசன் சென்டரில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்கிற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் அந்த பிரபலமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கடைகள், நிறுவன அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் என வரம்பின்றி பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்துள்ளன.

நேற்று மாலை வணிக வளாகத்தின் மாடிப் படியில் உள்ள ஸ்விட்ச் போர்டில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்பகுதிகள் தீப்பற்றும் வகையிலான எண்ணற்ற பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. தீப்பிடித்த மாடிப்படிக்கு நிலைதான் டியூசன் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு நேற்று சுமார் 30 மாணவ மாணவிகள் இருந்துள்ளனர்.

தீப்பிடித்த தகவல் அறிந்ததும் டியூசன் சென்டரில் இருந்து மாணவ மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். ஆனால் மாடிப்படிக்கட்டில் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் டியூஷன் சென்டர்  ஜன்னல் வழியாக சிலர் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி குதிக்க மாணவ மாணவிகள் சிலரை கீழே இருந்த பொதுமக்கள் தாங்கிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர்.

ஒரு சிலர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த கோர விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது வரை மாணவ மாணவிகள் உள்ளிட்ட 19 பேர் பலியாகியுள்ளதாக குஜராத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.