தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் உயிருடன் திரும்பிவந்த அதிசயம் -இப்படி ஒரு தில்லாலங்கடியா?

குஜராத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து இறந்த பெண் தற்போது உயிருடன் இருப்பதாக தெரிய வந்த நிலையில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகி உள்ளன.


குஜராத் மாநிலத்தின் பல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரின் பெண்ணான பிக்பென் என்பவர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இன்னிலையில் இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆன நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பிக்பென்  விஜீபா என்ற நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் அவர்களது காதல் தனது கணவருக்கு தெரிய வரவே அவர் அந்த காதலை கைவிடும்படி பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பிக்பென் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த 2005ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரகாஷ் என்பவரின் உறவினரான ஒரு நபர் வேலை விஷயமாக பிக்பென் வசிக்கும் அதே ஊருக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அப்பெண்ணை பார்த்துள்ளார் இதையடுத்து உடனே பிரகாஷ்க்கு உடனே போன் செய்து உனது மனைவி உயிருடன் தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பிரகாஷின் உறவினர்கள் மற்றும் பலர் அந்த ஊருக்கு உடனே விரைந்து சென்றனர் அப்போது அங்கு இருந்த அவரது மனைவி மற்றும் இரண்டாவதாக திருமணம் செய்த விஜீபா என்பவரையும் கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.

அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போது பிரகாஷின் மனைவி  போலீசாரிடம் கூறியதாவது விஜிபா என்பவரை விரும்பியதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் பிரகாஷ் என்பவருக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது கொண்ட காதலால் இருவரும் ஊரைவிட்டு ஓடிப் போவதாக திட்டம் தீட்டினோம் இந்நிலையில் விஜீபா  கொடுத்த தைரியத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை எரித்து கொலை செய்துவிட்டு அது பிக்பென் தான் என்பதை அவரது நண்பருடன் சேர்ந்து விஜீபா  நம்பவைத்துள்ளார். 

இந்நிலையில் அவரது உறவினர்களும்  அப்பெண் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நினைத்து அவரது இறுதிச்சடங்கு நல்லபடியாக முடித்துள்ளனர். பின்னர் அந்த நாள் இரவே இருவரும்  ரயிலில் ஏறி இந்த ஊருக்கு வந்தோம். இந்நிலையில் யார் கண்ணிலும் படாமல் இவ்வளவு நாள் கடந்து விட்டோம் தற்போதைய பிரகாஷ் உறவினர் ஒருவர் வந்து எங்களைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் காவல்துறையிடம் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டனர். ஈழத்து இவர்களது இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த அவரது நண்பர்கள் மற்றும் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் கொலை குற்றப்பிரிவு கீழ்  வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.