சீனர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம் வேர்கடலையாம்! எவ்ளோ சாப்பிடுவாங்க தெரியுமா!

தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.


தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சி குழு கண்டறிந்து உள்ளது.

சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.

சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள். வெறும் கடலை அல்லது கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வார்களாம். இதுதான் சீனர்கள் நீண்ட காலம் நோயின்றி வாழும் ரகசியமாம்.

கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிடக்கூடாது. தினமும் 5 முதல் 10 கடலையே மிகச்சிறந்த அளவு என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

அதாவது 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.

மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறதாம். பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும்.

அதனால், சாப்பிட கூடிய உணவு பொருட்கள் வெவ்வேறு விதத்தில் அவர்களின் உடலுக்கு நலனை தரும். ஆனால், தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.