என் காதல் மனைவி எங்கே? திருமண பட்டு வேட்டியுடன் ரயில் முன் பாய்ந்த புது மாப்பிள்ளை! அதிர்ச்சி காரணம்!

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான புது மாப்பிள்ளை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.


கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் தனுஷ்கோடி. இவருக்கும் நாமக்கல் பகுதியை சேர்ந்த பென்னி என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.  

இந்நிலையில் திருமணம் முடித்த பிறகு நாமக்கல்லில் தங்கியிருந்த இருவரும் கள்ளக்குறிச்சி சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் நாமக்கல் வந்த இருவரும் பென்னியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நாட்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்ப இருவரும் தயாரானபோது, பென்னி உடன் வரவில்லை.  

இதுகுறித்து தனுஷ்கோடியின் தந்தை கேட்டபோது, உடல்நிலை சரியில்லை என அவர்கள் பெற்றோர் கூறுகின்றனர். அவர்கள் பேசிய விதம் இருவரையும் பிரித்து விடுவார்கள் என எனக்கு தோன்றுகிறது. பென்னி இல்லாமல் என்னால் வாழ இயலாது. நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன் என தொலைபேசி மூலம் அவரது தந்தைக்கு தனுஷ்கோடி தெரிவித்துள்ளார்.  

பின்னர் இரண்டு நாட்களாக தனுஷ்கோடி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  

தனுஷ்கோடியை தேடி வந்த போலீஸார் சின்னசேலம் அருகே அவரை சடலமாக மீட்டுள்ளனர். அப்போது தனுஷ்கோடி தனது திருமணத்திற்கு கட்டியிருந்த பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இழப்பு தனுஷ்கோடி குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.