என் பொண்டாட்டி முன்னாடி என்னடா பண்ற? மண மேடையில் நண்பனை வெளுத்தெடுத்த மாப்பிள்ளை! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

கல்யாண மணமேடையில் வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டாக நினைத்து மாப்பிள்ளைக்குதொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தவர் பளீர் என அறையப்பட்டார்.


வடமாநிலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சி வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராக மணமேடைக்கு வந்து மணமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தி விட்டு சென்றிருந்தனர். 

அப்போது மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் அவருக்கு பின்னால் நின்றுகொண்டு, மாப்பிள்ளையை சீண்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மாப்பிள்ளை மிகவும் தர்மசங்கடமாக நெளிந்து கொண்டே இருந்தார். முன்னால் உறவினர்கள் அமர்ந்திருக்க, கேமராக்களும் படம்பிடித்துக் கொண்டிருக்க அந்தே நேரத்தில் நாம் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டால் தவறாக ஆகிவிடுமோ என்று பொறுமைக் காத்தார். ஆனால் அந்த நபர் நீண்ட நேரம் தொல்லைக் கொடுக்கவே பொறுமையிழந்த மாப்பிள்ளை என்ன என்று கேட்காமல் அந்த நபரை பிடித்து ஓங்கி ஒரு அறை விட்டார். அதில் அந்த நபர் அதிர்ச்சி அடைந்து போனார். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண் அவரைத் தடுக்க, அப்போதும் அவர் விடாமல் அந்த உறவினரைத் தாக்குகிறார். மாப்பிள்ளை பொறுமை இழந்து தாக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னதான் நெருங்கிய உறவினர் என்றாலும் அவர்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு சென்றால் நலம் விசாரித்தோமா, வாழ்த்தினோமா, சாப்பிட்டோமா, மொய் எழுதினோமோ என்று வரவேண்டும்.

அதை விட்டு கிறுக்கத்தனமாக ஏதாவது செய்யப் போனால் இதுபோன்று மரியாதையை கெடுத்துக்கொள்ள நேரிடும் என்பதே உண்மை. மற்றவர்கள் நிகழ்ச்சியில் நாம் விஐபிக்கள் அல்ல, மற்றும் பலர்தான்.