மேடையில் காத்திருந்த மணமகள்! தவிக்கவிட்டு மணமகன் 1 மணி நேரம் செய்த செயல்! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தத்தின் போது திடீரென காணாமல் போன மணமகன், பிறகு நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் மண்டபத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மஹோட்டப்பா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்தை நோக்கி பட்டாசு சத்தம் முழங்க குதிரைமேல் உட்கார்ந்தபடி ஊர்வலமாக மணமகன் வந்துள்ளார்.

இதையடுத்து மணமகன் ஊர்வலம் வரும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டுமென போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு தன் திருமணத்திற்காக நிச்சயக்கப்பட்ட இருந்த முகூர்த்தநேரம் கடப்பதையும் கவனம் கொள்ளாமல் மணமகன் திடீரென குதிரையிலிருந்து இறங்கி அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

மணமகன் நீண்ட நேரமாகியும் திருமண மண்டபத்திற்கு வராததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் இருந்துள்ளனர். பிறகு சில மணி நேரம் கழித்து மாப்பிள்ளை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக திருமண மண்டபத்திற்கு செய்தி வந்துள்ளது. இந்நிலையில் தனக்கு வரப்போகும் மருமகனின் இந்த செயலை தெரிந்த பின்னர் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.


ஒருவழியாக போராட்டம் முடிவுற்ற பிறகு ஒரு மணி நேரம் கழித்து மாப்பிள்ளை திருமண மண்டபத்திற்கு வந்ததும் நிச்சயக்கப்பட்ட மணப்பெண் மணமகனுக்கு திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தியதோடும் மணமகனின் பொது நலத்திற்கு பாராட்டு தெரிவித்தும் திருமண விழாவிற்கு வந்த அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சென்றனர்.