திருமணமான சில மணி நேரம்..! மச்சினிச்சி வீட்டில் சடலமாக கிடந்த மாப்பிள்ளை! பதற வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் திருமணம் முடிந்த ஒரு சில மணிநேரத்தில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


கலிபோர்னியாவில் ஜோ மெல்கோசாவுக்கு பெண் ஒருவருக்கும் 2 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அழைப்பு ஏதும் இல்லாமலேயே வந்த மர்மநபர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரச்சனையில் ஈடுபட்டனர். 

அவர்களை மணமகன் தடுத்து சண்டையை நிறுத்தி அனுப்பி வைத்தார். இதன் பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மணமகள் வீட்டின் பின்புறத்தில் புதுமாப்பிள்ளை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மர்மநபர்கள் மாப்பிள்ளை வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஜோ அவர்களை தடுக்க முயல கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டார். இதனால் அவர் இறந்து விட்டார். இந்த கொலை தொடர்பாக ரமிரீஸ், ஜோஸ் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் புதுமாப்பிள்ளை ஜோ இறுதிச்சடங்கிற்காக இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டது.