விடிந்தால் கல்யாணம்! முதல் நாள் மாப்பிள்ளை செய்த காரியம்! கண்ணீர் விடும் மணப்பெண்!

மதுரை மாவட்டத்தில் திருமண நாள் அன்று கடைசி நிமிடத்தில் சினிமா காட்சிகள் போல் மணமகன் காணாமல் போனதால் இருவீட்டாருக்கும் சோகம், அதிர்ச்சி, பகையை ஏற்படுத்தி உள்ளது.


மேலூர் அருகே புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மலைச்சாமியின் மகன் கருப்புசாமி என்பவருக்கும் பாண்டி என்பவரின் மகளுக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. பெண்ணின் வீட்டிலேயே திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்ப்பட்டிருந்தது. புதன்கிழமை காலை திருமணம் என்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மணமகன் மாயம் ஆனார்.

இதனால் எதிர்கால கனவுகளுடன் இருந்த மணமகளும் மற்றும் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த நாள் காலை திருமணம் என்ற சந்தோஷத்தில் உற்றாரும், உறவினரும் கூடியிருந்த வீடு சோகத்தில் மூழ்கியது. கடைசி நிமிடத்திலாவது சினிமாவில் வருவது போல் கருப்புசாமி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

தாலி கட்டும் நேரம் வரை மணமகன் கருப்புசாமி வராததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். கருப்புசாமி மற்றும் குடும்பத்தினர் வேண்டும் என்றே திருமணத்தை நிறுத்தி மோசடி செய்ததாக புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் தலைமறைவான மணமகனை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் பெண் வீட்டார் போலீசாரிடம் தெரிவித்தனர். கருப்புசாமி ஒருவேளை ஏற்கனவே வேறு யாரையாவது காதலித்து இருந்தாரா அல்லது இந்த மணப்பெண் பிடிக்காமல் ஓடிவிட்டாரா என உற்றார் உறவினர் வழக்கம்போல் பேசி வருகின்றனர்.