மளிகை கடைகள் இனி ஆஃப் டே தான் திறந்திருக்கும்..! வந்தது புது உத்தரவு!

மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.


மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை. பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.

மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் எப்போதும் போல் செயல்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

ஸ்விக்கி, ஜொமட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்ய நேரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு. காலை 7 - 9.30 மணி வரை சிற்றுண்டி, மதியம் 12 - 2.30 மதிய உணவு, மாலை 6 - இரவு 9 மணி வரை உணவு டெலிவரிக்கு அனுமதி.