உலகமகா நடிப்புடா சாமி… உதயநிதியின் போட்டோ சூட் அம்பலம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு பயணம் மேற்கொள்ளும் நேரத்திலும், தற்செயலாக விவசாயிகளை சந்திக்க நேர்ந்தால், உடனே செருப்பை கழட்டிப் போட்டுவிட்டு வயலில் இறங்கி நடப்பது வழக்கம்.


புலியைப் பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக, விவசாயிகளின் நண்பனைப் போன்று தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்துள்ளார் உதயநிதி. அதாவது இவரது பயணத்தின்போது விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்டாராம்.

அதற்காக வயலில் நடக்கும் போது காலில் ஷூ அணிந்துதான் வயலில் நடப்பாராம். செடிகளையும், நாற்றுகளையும் மிதிப்பாராம். அதேநேரம், கேமராமேனை பார்த்துவிட்டால், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது செருப்பை கையில் எடுத்து வைத்துக் கொள்வாராம்? 

உலக மகா நடிப்புடா சாமி. இங்கே நடிக்கிறதை சினிமாவில் கொஞ்சம் காட்டியிருந்தா, நடிப்பிலாவது நல்ல பெயர் வந்திருக்கும். அதுவும் இல்லாம, இதுவும் இல்லாம போயிடுச்சே உதயநிதி.