நம்பி வந்த காதலி! பஸ் ஸ்டாண்டில் நிற்க வைத்துச் சென்ற காதலன்! அழகி என உல்லாசத்துக்கு அணுகிய ஆண்கள்! திண்டுக்கல் விபரீதம்!

பேருந்து நிலையத்தில் சிறுமியை சீண்டிய இளைஞர்கள் காதலனை நம்பி வந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்.


பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் தனியாக இருந்த சிறுமியை இளைஞர்கள் பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படித்த சிறுமி 2 மாதங்களுக்கு முன்னர் மதுரைக்கு ரயிலில் வந்தபோது அதே ரயிலில் பயணம் செய்த ஒரு இளைஞர் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும் தன்னுடைய பெயர் சையது இப்ராகிம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனிடைய இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ரயில் பயணத்தின்போது தொடர்ந்த காதல் இரவு பகலுமாக செல்போன் மூலம் பல நாட்கள் நீடித்தது. இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அதை அவர்கள் கண்டித்துள்ளனர். இந்த விவரம் தெரிந்து கொண்ட சையது இப்ராகிம் அந்த சிறுமியை திண்டுக்கல் வருமாறு அழைத்துள்ளார். 

இதை நம்பி சென்ற சிறுமியை ஒரு தனியார் விடுதியில் வைத்து நாள் முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் இவர்கள் இருவரும் தங்கள் காதலை தொடர்வதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டனர். 

இதுகுறித்து காதலனிடம் தெரிவித்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த இளைஞர் சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து விட்டார். அதன் பின்னர் தான் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கி வருவதாகவும் அதுவரை பேருந்து நிலையத்திலேயே இருக்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார் சையது இப்ராகிம்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு வரை காத்திருந்த சிறுமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மேலும் நள்ளிரவு என்பதால் தன்னந்தனியாக நின்ற சிறுமியை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதனால் கதறி அழுத சிறுமி தான் காதலனால் ஏமாற்றப்பட்டு நிற்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இளைஞர்கள் அந்த சிறுமியை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை அழைத்து வந்த இளைஞரின் செல்போனை வைத்து அவர் யார் என்ற விவரத்தை சேகரிக்கின்றனர்.

ஒருவேளை அந்த நபர் சிக்கினால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்பதில் ஐயமில்லை. வீட்டில் குழந்தைகள் கேட்பதால் செல்போன் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் அந்த செல்போனால் பிரச்சனைகள் வரும்போதுதான் தலைகுனிந்து நிற்கின்றனர்