பேத்திக்கு வாங்கிய பிஸ்கட்டில் அதிர்ஷ்ட லாட்டரி! ரூ.2500 கோடிக்கு அதிபதி ஆன தாத்தா!

அமெரிக்காவில் பேத்தியின் அதிர்ஷ்ட எண்கள் அடிப்படையில் லாட்டரி வாங்கிய முதியவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்


வடகரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் டபிள்யூ ஜாக்சன். தனது மனைவியுடன் வியட்நாமிய உணவகத்துக்கு செல்வது இவரது வழக்கம் வழக்கம் போல அன்றும் அங்கு சென்ற அவர், தனது 8 வயது பேத்திக்காக ஃபார்ட்ச்யூன் குக்கீஸ் வாங்கினார். 

ஃபார்ச்சூன் குக்கீஸ் நிறுவனம், அதன் பாக்கெட்டுகளின் உட்புறம் அதிர்ஷ்ட எண்களை  பதிவிட்டு அதனைப் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்ற விளமபரத்துடன் விற்பனை செய்து வருகிறது. 

தனது பேத்திக்காக ஃபார்ச்சூன் குக்கீஸ் வாங்கிய்ய சார்லஸ், அதனை நம்பவில்லை என்றபோதும், சற்று விளையாட்டாகவும், அசட்டையுடனும் அந்த எண்ணைப் பயன்படுத்தி லாட்டரி வாங்கினார். குலுக்கலும் நடைபெற்றது. முடிவுகள் வந்த போது சார்லஸால் தனது கண்களையும் காதுகளையுமே நம்பமுடியவில்லை 

அவருக்கு 344.6 மில்லியன் டாலர் பரிசூ கிடைத்திருந்தது. இந்திய மதிப்பில் அது 2,385 கோடி ரூபாய். வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் இரண்டு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு ராணுவ மருத்துவமனைக்கு தலா 10 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.