மலைவாழ் இனத்தின் இளம் பெண் ஒருவர் தனது மொத்த குடுமத்தையும் இழந்த நிலையில், அவரது கல்வி செலவை தானாக முன்வந்து ஏற்ற தமிழக அரசு.
தாய், தந்தை, தம்பி அடுத்தடுத்து மரணம்! தவித்த மாணவியை நெகிழ வைத்த எடப்பாடி!

சத்திய மங்கலம், மலைபகுதியான காளி திம்பம் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி, சிறுவயதில் தனது தாயை இழந்தவர். தனது தந்தை உதவியுடன் கோவை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் தனது தந்தையும் உடல் நலக்குறைவால் இறந்து விட வேறு வழியில்லாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.
இதற்கிடையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உழைத்து தனது சகோதரர் படிப்பை கவனித்து வந்த மாணவி நிலையை கேள்விபட்ட தமிழக அரசு முதல்வர், தாமாக முன் வந்து அவரது கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார்.இதனால் மீண்டும் அதே கோவை கல்லூரியில் தனது படிப்பை துவங்குகிறார், மாணவி சிவரஞ்சனி.