கொரோனா தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராகி வருகிறது அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை!

கொரோனா தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை.


சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ஒதுக்கப்பட்டுளது. மேலும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கேற்ப மருத்துவக் குழுவினர் தயாராக இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி சில தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் சுமார் 2 ஆயிரம் பாதுகாக்கப்பட்ட மருத்துவ அறைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை. இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த 3 அல்லது 4 வது வாரத்தில் தான் இதன் வீரியம் அதிகரித்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி இந்தியாவில் இதன் தாக்குதல் ஆரம்பித்து இது இரண்டாவது வாரமாகும். அடுத்தத வாரங்களில் இந்த நோயின் காரணமாக ஏற்படப் போகும் உயிரிழப்புகளை எண்ணி கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் மருத்துவ வட்டாரங்கள். ஏற்கனவே மார்ச் 24 மாலை 6 மணி முதல் 31-ஆம் தேதி இரவு வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் நடமாடும் பட்சத்தில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இரண்டு வருடம் வரையில் கடுமையான சிறை தண்டனை கொடுக்கும் வகையில் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில். கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர் சென்னை உட்பட நாடு முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களை கடுமையாக கண்காணித்து வருகிறது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்.

மணியன் கலியமூர்த்தி