அரசு உதவவில்லை! தனி ஆளாக போராடினேன், வென்றேன்! உண்மையை போட்டு உடைத்த கோமதி மாரிமுத்து!

தமிழ்நாடு சார்பாக விளையாட பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதாகவும், என்னை போன்று பலர் உதவி இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய உதவி கிடைக்க தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை மைலாப்பூரில் கோமதி மாரியப்பனுக்கு தனியார் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு சிறப்பு தங்க நாணயம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி, யாரும் அறியாத சிறிய கிராமத்தில் தடகளத்தில் சாதிக்க தன்னுடைய தந்தை தான் காரணம் என கூறினார். 

தமிழ்நாடு சார்பாக விளையாட பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும், இருந்தபோதிலும் தடைகளை கடந்து விளையாடியதாக அவர் தெரிவித்தார். தன்னை போன்று பலர் வெளி உலகத்துக்கு வராமல், விடுதிகளில் உரிய உணவின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு அரசு சார்ந்த உதவிகள் அதிகம் கிடைத்தால் இன்னும் பல வீராங்கணைகள் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் வரும் ஒலிம்பிக் போட்டியில் வெல்வதற்கு வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற வேண்டி உள்ளது என்றும் அதற்கு தமிழக அரசின் உதவி கிடைத்தால் நான் நிச்சயம் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதாக நம்பிக்கை தெரிவித்தார். 

இந்நிலையில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்தமைக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், கோமதியை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.