ஸ்டாலின், கனிமொழியைக் கூப்பிட்டு கவர்னர் மிரட்டினாரா? ஆளுநர் மாளிகையில் நடந்தது இதுதான்..!

கவர்னரை சந்திக்கச்சென்ற ஸ்டாலின் குரூப் அத்தனை பேரும் முகம் செத்துப்போய் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். கவர்னர் கேட்டுக்கொண்டதால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டதை தள்ளிவைப்பதாக அறிவித்தார் ஸ்டாலின்.


ஆனால், கவர்னர் அறையில் என்ன நடந்தது என்று ஒரு பதிவு வைரலாகப் பரவியது. அந்த பதிவு கூறுவது இதுதான். ஆளுனரை சந்தித்த தி.மு.க.வினரிடம் 23 தனித்தனி கோப்புகள் காண்பிக்கப்பட்டனவாம்

1. முரசொலி அறக்கட்டளை குறித்த 3 கோப்புகள் தனியார் அறக்கட்டளை அனைத்தும் அரசுடமையாக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது

2. தி.மு.க வின் மாவட்ட அலுவலகங்கள், 16 நபர்கள் கொலைகள் மற்றும் தி.க மற்றும் தி.மு.கவினரின் தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்த 6 கோப்புகள்

3. கலைஞர் டி.வி குறித்த 2 கோப்புகள்

4. மு.க.அழகிரியின் கடிதம் அடங்கிய குடும்ப சொத்து குறித்த 2 கோப்பு

5. கனிமொழி குடும்ப வியாபாரம், தொழில் தொடர்பான 2 கோப்புகள்

6. துரைமுருகன், டி ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட 1321 பேரின் 1967_-2017 வரையான 50 ஆண்டு சொத்து வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 3 தொடர் கோப்புகள்

7. தயாநிதி, கலாநிதி வழக்கு, சன் டிவி தடை உட்பட கருணாநிதியின் சகோதரிகள் குடும்பத்தினர் சொத்து விவரம் அடங்கிய 3 கோப்புகள்

8. ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருவிளையாடல் குறித்த 2 கோப்புகள்

இவற்றை படித்துப் பார்த்தனராம். அவற்றில் எள்ளளவு கூட தவறான குறிப்புகள் இல்லை என்றதும் ஸ்டாலின், கனிமொழி முகமும் இருண்டு விட்டதாம் பின்னர் தஸ்தாவேஜ்கள் அனைத்தும் ஆளுனர் தனி அறைக்கு கொண்டு செல்லப் பட்டனவாம். அதன்பிறகு வெளியே வந்த கவர்னர், ‘சரி போய் வாருங்கள்’ என்று அனுப்பிவைத்தாராம் கவர்னர். உடனே வெளியில் வந்து போராட்டம் ஒத்திவைப்பதாக அறித்தார்களாம். 

இந்த பதிவு மளமளவென சுற்றிவரும் நிலையில், தி.மு.க.வின் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு விளக்கம் ஒரு அளித்துள்ளார். அதில், “திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் அழுத்தம் கொடுத்தார் என்று பரப்பப்படும் செய்திகள் அபத்தமானவை. நாங்கள் இதுபோன்ற அபத்தங்களுக்கு என்றைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நாங்கள் ஆளுநரை சந்திப்பதற்கான எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஆளுநர்தான் எங்கள் தலைவரை சந்திப்புக்காக அழைத்தார்.

அந்த சந்திப்பின்போது போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு இந்தியைத் திணிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதை நானே மத்திய அரசின் பிரதிநிதியாக உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்றுதான் ஆளுநர் எங்களிடம் கூறினார். மற்றபடி ஆளுநர் எங்களுக்கு அழுத்தமும் கொடுக்கவில்லை’’ என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளுநர் மாளிகையிலேயே எங்களது போராட்ட அறிவிப்பினை திரும்பப் பெறுவதாக நாங்கள் சொல்லவில்லை. உடனடியாக அறிவாலயம் வந்த தலைவர், சக நிர்வாகிகளோடு ஆலோசித்தார். அப்போது அமித் ஷாவுக்குத் தெரியாமல் ஆளுநர் இந்த விஷயம் பற்றி நம்மோடு பேசியிருக்க மாட்டார் என்று கூறினோம்.

மேலும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசுவது என்பது திமுகவுக்கு மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கான சான்று என்று விவாதித்தோம். அதன் பிறகே போராட்டம் ஒத்திவைப்பு முடிவை மேற்கொண்டோம்” என்றார் டி.ஆர்.பாலு.

மேலும், “இந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் எவ்வித பெரிய போராட்டங்களும் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருக்கக் கூடும்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.

என்னமோப்பா... நல்லா இருந்தா சரிதான்.