அரசு வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் ஆபாச படம்! பெண் அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங்கின் போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலத்தில் வீடீயோ கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து மாநில உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறைச் செயலாளர் முக்தா சின்ஹா மாநிலம் முழுவதும் 33 மாவட்டங்களைச் சேர்ந்த துறை அதிகாரிகளிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். 

இந்நிலையில் ஆலோசனைக்கிடையே அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு அதற்கு பதிலாக தொடர்பில் இருந்த அனைத்து அதிகாரிகளின் மானிட்டர்களிலூம் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக பெண் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை செயலாளர் முக்தா சின்ஹா, இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.