5 பெண்கள்! 92 ஹைகுவாலிட்டி வீடியோக்கள்! சிக்கும் அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்பிக்கள்! மாநிலத்தையே உலுக்கி எடுக்கப்போகும் சம்பவம்!

போபால்: அரசு அதிகாரியை வீடியோ எடுத்து மிரட்டும் பெண்கள் கும்பலை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


அங்குள்ள இந்தூர் கார்ப்பரேஷனில் பணிபுரிபவர் ஹர்பஜன் சிங். இவர் செவ்வாய்க்கிழமை  போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ''ஷிவானி மற்றும் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்கள் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிருந்தனர். இதனை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வருகின்றனர்.

பலமுறை அவர்கள் கேட்டதற்காக பணமும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னை ரூ.3 கோடி கேட்டு அவர்கள் மிரட்டுகின்றனர். அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்,'' என, ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். இதன்படி வழக்குப் பதிந்த போலிசார் குறிப்பிட்ட 2 பெண்களை கைது செய்தனர்.  

அவர்களை விசாரித்தபோது, இதில் மேலும் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக, தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி, ப்ரீத்தி (அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) என இந்த 5 பெண்களும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது, அவர்களுக்கு தேவைப்படும்போது பெண்களை விபசாரத்திற்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளனர்.

அதனை வீடியோவாக எடுத்து, சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி, பணம் பறிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இப்படி பலரையும் தங்களது வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களிடம் சுமார் 92 வீடியோக்கள் இருக்கலாம் என்றும், 40க்கும் அதிகமான இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.