திடீரென பிரேக் போட்ட அரசுப் பேருந்து! அவசரத்தில் வந்து மோதிய 108 ஆம்புலன்ஸ்! நோயாளியுடன் டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்!

பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஓட்டுநர் மற்றும் நோயாளி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து பெண் நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது.

அப்போது, ஆத்தூர் அருகே சென்று கொண்டிருக்கையில், அதிவேகமாக முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதியது. இதனால், ஆம்புலன்ஸ் முன்புறம் முழுவதும் நசுங்கி ஓட்டுநர் மற்றும் நோயாளி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநரின் உதவியாளர் படுகாயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்.

சம்பவம் குறித்த விசாரணையில், ஆத்தூர் அருகே செல்கையில், ஆம்புலன்ஸ் முன்னே சென்ற பேருந்து அதிவேகமாக சென்றதாகவும் வளைவு பகுதியில் திடீரென பிரேக் அடித்தால் பேருந்தின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.