சமோசா கடை வருமானம் ரூ.1 கோடி! ஜிஎஸ்டி அதிகாரிகளை வாய் பிளக்க வைத்த ஓனர்!

உத்திரப் பிரதேசத்தில், சமோசா கடையில் ரூ60 லட்சம் வரை சம்பாதிப்பதாக வந்த தகவலை அடுத்து நோட்டமிட்ட அரசு ஜி.எஸ்.டி பதிவு செய்ய அறிவுறுத்தல்..


உத்திரப் பிரதேச மாநிலம் அலிகரில், முகேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சமோசா கடை நடத்திவருகிறார்.இந்த கடையில் சமோசா ருசி தனித்துவத்திற்க்காகவே கூட்டம் அலைமோதுமாம். இந்த நிலையில் கடைக்காரருக்கு ஆகாத விசமி, முகேஷ் சமோசா கடை வருமானத்தை கணக்குக்காட்டாமல் அரசை வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து, முகேஷின் கடையில் ஒரு நாள் முழுக்க அதிகார்கள் நோட்டமிட்டதில், சராசரியாக மாத வருமானம் சுமார் 60 இலட்சம் முதல் 1 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் அரசின் சார்பில் முகேஷ் ஜி.எஸ்.டி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

இது குறித்து பேசிய முகேஷ், தான் படிப்பறிவில்லாத சாதாரண உழைப்பாளி, அரசு கூறுவது போல எனது கடையில் மாத வருமானம் 60 இலட்சம் என்பது அபத்தமானது. மேலும் ஜி.எஸ்.டி பற்றிய எந்த புரிதளும் தனக்கு இல்லை எனவும் யாரோ விசமி செய்த வேலை என நொந்துக்கொண்டார் .