ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மூணு வருஷம் டயம் வாங்கியாச்சாம்! இப்படித்தானப்பா நீட்டுக்கும் ஏமாத்தினீங்க!

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு வாங்கிவிடுவோம் என்று சொல்லிவந்த அ.தி.மு.க. திடீரென கோச்சிங் கிளாஸ் தொடங்கி அனைத்து மாணவர்களையும் எழுத வைத்துவிட்டது. அனிதா மரணத்தையும் அரசு கண்டுகொள்ளவில்லை.


இந்த நிலையில்தான் 5 மற்றும் 8ம் வகுப்புக்குத் தேர்வு என்று செங்கோட்டையன் அறிவிப்பு செய்தார். இந்த தேசியக் கல்விக் கொள்கையை ஒரு மாநிலமும் கடைப்பிடிக்காத நிலையில், தமிழகம்தான் முதன்முதலாக அறிவிப்பு செய்தது. இதற்காக கடும் கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில் மீண்டும் ஏமாற்றும் வேலையில் செங்கோட்டையன் அடுத்த அறிவிப்பு செய்துள்ளார்.

அதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்களை பெயில் ஆக்கும் திட்டம், 3 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டில் தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை வழக்கம்போல தேர்வு நடைபெறும். மாணவர்கள் யாரும் பெயில் ஆக்கப்பட மாட்டார்கள். மத்திய அரசிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குத் தமிழ்நாடு அரசு விலக்கு பெற்றுள்ளது.

மூன்று ஆண்டுகளில் மாணவர் கல்வித்தரம் உயர்ந்து, அனைவரும் தேர்ச்சிபெறும் நிலையை எட்டிவிடுவர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அப்போது ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நீட்டுக்கும் இதே கதைதான் சொல்லப்பட்டது. இவர்கள் சொல்வதை நம்பி பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், ஃபெயிலாக்கி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் ஜாக்கிரதை.