அம்மாடியோவ்..! கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி..! வாரிக் கொடுக்கும் கூகுள் சுந்தர் பிச்சை..! ஆனால் யாருக்கு தெரியுமா?

சென்னை: ''இனிதான் பயங்கரமான வகையில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிகழப்போகிறது,'' என்று, பிரபல மருந்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு, மருந்து கண்டறியும் பணியில் பலரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது சார்ந்த ஆய்வுப் பணிகளுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனமும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இதனை உறுதி செய்துள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மூலமாக, இந்த நிதியை பல்வேறு சுகாதார நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும்  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கண்டறியும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு வழங்க உள்ளதாக, சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  

இதுதவிர, கோவிட் 19 வைரஸ் தொற்றால் தொழில் நலிந்துள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, கட்டணம் ஏதுமின்றி அவர்களின் வர்த்தகத்திற்கு உதவக்கூடிய விளம்பரங்களை தனது தேடுபொறிகளில் செய்துதரவும் கூகுள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.