படித்து முடித்து 30 வயதாகியும் நிலையான வருமானத்திற்கு பலர் சிரமப்படும் நிலையில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் மகன் தனது 11 வயதிலேயே சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன்! 11 வயதிலேயே சுயமாக சம்பாதிக்கும் சுந்தர் பிச்சையின் வாரிசு!

நியுயார்க் டைம்ஸ்
நாளிதழுக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான்
11 வயதிலேயே தனது மகன் ஆன்லைன் மூலமாக வருமானம் ஈட்ட ஆரம்பித்துள்ள தகவலை சுந்தர் பிச்சை
வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது:- தற்போதைய உலக
சூழலை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் வளர்ந்த காலம் மிகவும் நன்றாக இருந்தது.
நான் சென்னையில்
இருந்த காலத்தில் மிகச்சிறிய ஒரு வீட்டில் தான் இருந்தோம். எங்கள் வீட்டையே நாங்கள்
உள் வாடகைக்கு விட்டு வைத்திருந்தோம். நான் எப்போதுமே வரவேற்பு அறையில் தான் தூங்குவேன்.
அந்த கால கட்டத்தில் அடிப்படை தேவையான ஒரு பிரிட்ஜ் கூட வாங்க முடியாத சூழல் எங்கள்
குடும்பத்திற்கு இருந்தது. ஆனால் நாங்கள் வாழ்வை அப்போதும் கூட நிறைவாகவே வாழ்ந்தோம்.
நான் சென்னையில் வளர்ந்த கால கட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது தண்ணீர் தாகத்தை தணிக்க கூட போராட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நான் எங்கு சென்றாலும் எனக்கு அருகே ஒரு வாட்டர் பாட்டில் வைக்கப்படுகிறது. மற்ற அனைவரது வீடுகளிலும் அப்போது பிரிட்ஜ் இருந்தது. பின்னர் எங்கள் வீட்டிற்கும் ஒரு பிரிட்ஜ் வந்தது- அது சாதாரண விஷயம் இல்லை.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்
படிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு தான் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் சந்தர்ப்பம்
ஏற்பட்டது. ஆனால் இன்று எனது மகனுக்கு 11 வயது தான் ஆகிறது. ஆனால் அவன் மைனிங் எத்தரியும்
மூலமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு தற்போதே இந்த உலகம்
எப்படி இயங்குகிறது என்பது தெரிகிறது. தொலைநோக்கு பார்வை இருக்கிறது. ஏன் வர்த்தகம்
குறித்து கூட அவனுக்கு புரிதல் இருக்கிறது.
இவ்வாறு அந்த பேட்டியில்
சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சுந்தர் பிச்சைக்கு அஞ்சலி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு
குழந்தைகள் உள்ளனர். அவர்களின் மூத்தவர் காவ்யா பிச்சை. இளையவர் கிரண் பிச்சை. இவர்களில்
கிரண் பிச்சை தான் ஆன்லைன் மூலமாக தனது 11 வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.