அதிக பாரம்! அசுர வேகம்! தலைகுப்புற கவிழ்ந்த லாரி! பைக்கில் இருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!

ஈரோடு அருகே வேகமாக வந்த சரக்கு லாரி நிலை தடுமாறி சாய்ந்ததில் பைக் ஓட்டுநர் லாரியின் அடியில் மாட்டிக்கொண்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.


ஈரோடு, சத்திய மங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் பகுதியில் இரவு நேரங்களில் சரக்கு லாரிகள் வெகுவேகமாக வருவது சகஜம்தான் என்றாலும், அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு லாரி, நிலைத்தடுமாறி எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது. அதாவது அந்த லாரி அதிக பாரத்தை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.

பாரம் அதிகம் இருந்த நிலையில் வாளைவில் திரும்பும் போது லாரியை பிறகு நேராக செலுத்த முடியவில்லை. இதனால் அதிக பாரத்துடன் அந்த லாரி அப்படியே கவிழ்ந்துள்ளது. அந்த சமயத்தில் அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பழனிசாமி என்பவர் தனது பைக்கில் ஏறி அமர்ந்திருந்தார்.

லாரி கவிழ்வதை பார்த்து தப்ப முயன்ற அவரால் உடனடியாக பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. கால்களாலேயே பைக்கை நகர்த்திய நிலையில் லாரி அப்படியே அவர் மீது கவிழ்ந்தது. இருசக்கர வாகனத்துடன் லாரியின் அடியில் மாட்டிக்கொண்ட பழனி மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த  பழனி சிகிச்சைப் பலனிறி பரிதாபமாக  உயிரிழந்தார்.

மேலும் விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.