கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நேரம் வந்தாச்சு! சித்தராமையா ராஜினாமாவுக்குக் கொண்டாட்டம்!

குமாரசாமியின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஜோராக போய்க்கொண்டிருந்த நேரத்தில், அதனை குடை சாய்த்தவர்தான் சித்தராமையா.


அவரது அட்டூழியங்களால்தான் பலர் கட்சி மாறும் நிலைமை ஏற்பட்டது. உண்மையில் 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் சித்தராமையாதான். தேர்தலில் தோற்ற போதே சித்தராமையா, அவர் ஒதுங்கி இருந்தால், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்பி பிழைத்திருக்கும்.

ஆனால் தன் விசுவாசிகளையெல்லாம் குமாரசாமிக்கு எதிராக தூண்டிவிட்டு, பா.ஜ.க.வின் குதிரை பேரத்துக்கு துணைப்போனார். அதனால்தான் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இப்போதும் அங்கு நடைபெற்ற 15 தொகுதி தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது. அதாவது எடியூரப்பாவுக்கு இப்போது முழுமையாக மெஜாரிட்டி கிடைத்துவிட்டது.

இனி, அரசியல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சித்தராமையா. அவரின் ஏதேச்சதிகாரமும், அளவுக்கு மீறிய‌ சுயநலமும், பதவி வெறியும் தான் காங்கிரஸின் இந்த மோசமான தோல்விக்கு காரணம்.

பாரம்பரிய காங்கிரஸாரை எல்லாம் கட்சியை விட்டு துரத்திவிட்டு, இப்போது தார்மீக ரீதியாக ராஜினாமா செய்கிறேன் என்கிறார். இதை மக்களவைத் தேர்தலுக்கு முன்பே செய்திருந்தால், கர்நாடகாவில் காங்கிரஸ் சரிபாதி இடங்களையாவது பிடித்திருக்கும். இப்போது காங்கிரஸ் மூழ்கும் கப்பலாகி விட்டதால், தப்பியோடுகிறார்.

சித்தராமையா ராஜினாமா விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டித் தீர்த்துள்ளனர். இனியாவது சரியான தலைமையை நியமனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆட்கள் தலைமைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். சிவகுமாரை தலைவராக்கவும் ஆசைப்படுகிறார்கள். சோனியா என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.