தமிழகத்திலும் பாடத்திட்டம் குறைப்பு..! மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்யும் ஒரே அரசு தமிழக அரசு..

கொரோனா லாக்டவுன் தொடங்கி, திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது வரை, மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதனை தட்டாமல் செய்யும் ஒரே அரசு நம் தமிழக அரசு மட்டும்தான்.


புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் முன்னரே, தமிழகத்தில் தொடங்கி வைத்த பெருமையும் எடப்பாடிக்குத்தான் உண்டு. அந்த வகையில் இப்போது பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை அறிவித்துள்ளது எடப்பாடி அரசு. ஆனால், இதற்கு காரணம் மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை ஆகும். 

ஆம், வர இருக்கும் புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் பாடச்சுமை 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அதனை பின்பற்றி, தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடேங்கப்பா, என்னா விஸ்வாசம். தல அஜித்தை மிஞ்சிவிடுவார் போலிருக்கே எடப்பாடி பழனிசாமி. எப்படியோ மாணவர்களுக்கு நல்ல யோகம்தான்.