சென்னை தரமணியில் இயங்கிவருகிறது தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்.
அண்ணா பிறந்த நாளில் புத்தகப் பிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 50% தள்ளுபடியில் புத்தக விற்பனை!

இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 40000 அரிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன . செப்டம்பர் 15 முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு. செப்டம்பர் 15 முதல் 20 ஆம் தேதி வரை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள தரமணியில். 50% விலையில் விற்பனை செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
திருவான்மியூர் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது இந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
1968 சனவரியில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழ் மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் இந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டு 1970இல் தொடங்கப்பட்டது ஆகும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல ஆராய்ச்சியாளர்களுக்கு அருத்தமாக விளங்கிவருகிறது என்றும். மறைமலையடிகள். தேவநேயப்பாவணர். வ உ சிதம்பரனார் போன்றவர்களின் அரிய தகவல்கள் அடங்கிய நூல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1968 ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினை பதிவு செய்ய அடிகோலியவர் முன்னாள் முதலமைச்சர் திரு மு கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் தொடக்க காலத்தில் முதன்மை ஆட்சி அலுவலர்களாக கா மீனாட்சிசுந்தரம். வே சுப்ரமணியம். அ.ந பெருமாள். சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் திறம்பட பணியாற்றி உள்ளனர்
தமிழ் இலக்கிய வரலாறு. ஊர்ப் பெயராய்வு. தமிழகத்தில் நாட்டுப்புற தெய்வ வழிபாடு. தெருக்கூத்து. தமிழ் இலக்கியத்தில் ஊனம் பற்றிய ஆய்வு. தமிழக மகளிர் பிற நாட்டினருக்கு தமிழ் கற்பதற்குரிய திட்டப்பணிகள். மொழிபெயர்ப்பு. சுவடிப் பதிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 40000 நூல்கள் ஆய்விதழ்கள் முனைவர் பட்ட ஆய்வேடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மணியன் கலியமூர்த்தி