தான் தங்கம் வென்ற போட்டியில் தனக்கு ஓட நல்ல ஷூ கூடஇல்லை என்று கோமதி மாரிமுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிஞ்சு போன ஷூவுடன் ஓடித்தான் தங்கம் வென்றேன்! கோமதி மாரிமுத்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்று திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட பிறகு கேமாதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:.
பிறந்தது முதலே வருமை தான். தந்தை என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. அவர் ஆனால் தற்போது இல்லை. எனக்காக என் தந்தை மாட்டும் தீவனத்தை சாப்பிட்டுள்ளார். அதாவது வீட்டில் கொஞ்சம் தான் சோறு இருக்கும். அதை எனக்கு கொடுத்துவிட்டு என் தந்தை பசியில் மாட்டுத் தீவனத்தை சாப்பிடுவார்.
எனக்காக இவ்வளவு தியாகம் செய்த தந்தை தற்போது இல்லை. மிகுந்த சிரமப்பட்டுதான் இந்த சாதனையை படைத்தேன். கத்தாரில் ஓடுவதற்கு என்னிடம் நலல ஷூ கூட இல்லை. பிஞ்சு போன ஷூவை போட்டுத் தான் ஓடினேன். தற்போது தங்கம் கிடைத்துள்ளது. இவ்வாறு கோமதி கூறினார்.