சாலையில் பவனி வந்த தங்க கார்..! ஓட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கிய பரிதாபம்! பின்னர் அரங்கேறிய விபரீதம்!

ஜெர்மனியில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்ற தங்க நிறத்தில் ஜொலித்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகரில் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த கார் மற்றவர்களுக்கு கண் கூசும் வகையில் சாலையில் சென்று கொண்டிருந்தது. சூரிய ஒளியையும், மற்ற ஒளிகளையும் பிரதிபலித்ததால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு கண்கூசியது. இதனால் பலரும் வாகனம் ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.

தன்னுடைய கார் தனித்துவமாக தெரிய அந்த கார் உரிமையாளர் சில மாற்றங்களை செய்தது தெரியவந்துள்ளது. போக்குவரத்து விதிகள்படி ஒரு நிறுவனத்தின் காரில் மாற்றங்கள் செய்யக்கூடாது. இந்த நடைமுறை பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதையடுத்து அந்த தங்க நிற காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு அடி கூட காரை நகர்த்த அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்ததால் காரை விட்டு விட்டு நடந்தே சென்றார் உரிமையாளர். இதை அடுத்து அந்த கார் சாலையில் செல்ல தகுதி படைத்ததால் என போலீசார் ஒரு நிறுவனத்திடம் தந்து சோதனை நடத்தி வருகின்றனர்.