நகை கடை அதிபர் வீட்டில் கொள்ளை! நகையை மூட்டையாக அள்ளிச் சென்றனர்!

மதுரையில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 170 பவுன் நகை,வைரம் கொள்ளை - வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்


மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபரான சங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்றுள்ளார்,

இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்மகும்பல் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 170 பவுன் நகை,வைரம், பணம் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்,

கதவை உடைந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,

முதல்கட்ட விசாரணையில் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அடித்த பிறகு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தடயங்களை அழித்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.