தொட முடியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது தங்கம் விலை..! 50 ஆயிரத்தை தொடப் போகிறதாம்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே உள்ளது!


இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 4,900 ஆயிரத்தை தொட்டுவிட்டது…! இந்த ஆண்டு முடிவதற்குள் பவுன் 50 ஆயிரத்தை தொட்டுவிடும் என்று சொல்கிறார்கள். பொருளாதார மந்த நிலையே அதற்கு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுசரி, தங்கம் கடந்துவந்த பாதையைப் பார்க்கலாமா..?

1920 – ரூ 2.10 பைசா!

1930 – ரூ 3.05 பைசா!

1947 – ரூ 5.40 பைசா!

1964 – ரூ 6.32 பைசா!

1974 – ரூ 50.60 பைசா!

1994 – ரூ 460

2004 – ரூ 585

2014 – ரூ 2,800

2020 – ரூ 4,900

அடேங்கப்பா, நூறாண்டுகளில் தங்கம் 2,400 மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதுவும் தங்கத்தின் விலை சென்ற ஒரே ஆண்டில் ஒரு கிராம் ரூ 3,000 த்தில் இருந்து 4,900 ஆக உயர்ந்துள்ளதானது வரலாற்றில் இல்லாத பெரும் விலையேற்றம். இதில் 2008 முதல் உலக நாடுகள் தங்கள் அரசு வங்கியில் தங்கத்தை ஒரு சேமிப்பாக வைக்கத் தொடங்கியது முதல் தான் தங்கம் அதிக விலையேற்றம் காண ஆரம்பித்தது. அந்த வகையில் உலகில் அமெரிக்கா தான் 8,135 டன் தங்கத்தை வங்கியில் வைத்துள்ள மிகப் பெரிய பணக்கார நாடு! இந்திய அரசோ வெறும் 618 டன் தங்கத்தை தான் வங்கியில் இருப்பாக வைத்துள்ளது!

ஆனால், உலகில் காலங்காலமாக தங்கத்தை அதிகமாக வாங்கி பயன்படுத்தும் நாடு என்ற வகையில் இந்திய மக்களின் வீடுகளில் உள்ள தங்கம் 28,000 க்கும் மேற்பட்ட டன்களாகும்! அதாவது, இது கோயில்கள், மற்றும் அறக்கட்டளைகளை சேர்க்காத கணக்கு! இந்த வகையில் தங்கம் கையிருப்பில் உலகில் இந்தியாவை மிஞ்ச இன்னொரு நாடில்லை என்று சொல்லப்படுகிறது.

சாதாரண மக்களை மதிக்காத தங்கத்தை, மக்களும் மதிக்காமல் இருப்பதுதான் நல்லது. தங்கத்தை விட்டுத்தள்ளுவோம்.