விண்ணை தொட்டது தங்கம் விலை! இல்லத்தரசிகளை அதிர வைத்த விலை உயர்வு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,680 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,640 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் மாநகரங்களிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கிராட் தங்கம் ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்து 3,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் சவரனை கணக்கிடும்போது நேற்றைய விலையில் இருந்து 640 உயர்ந்து 29,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றை விலையில் ஒப்பிடும்போது ஒருகிராம் 80 ரூபாய் உயர்ந்து 3,837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனை கணக்கிடும்போது நேற்றைய விலையில் இருந்து 640 உயர்ந்து 30,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை சென்னையில் ஒருகிராம் ஒரு ரூபாய் உயர்ந்து 49 ரூபாய் 20 பைசாவாகம், ஒரு கிலோ பார் வெள்ளி 1,000 ரூபாய் உயர்ந்து 49,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2019 ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியத. ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.