ஜோதிகாவை கைது செய்யப்போறோம்! சூர்யாவை மிரட்டும் பாஜக! அதிர்ச்சியில் சிவக்குமார் குடும்பம்!

கல்விக்கொள்கை விவகாரத்தில் சூர்யா பேசிய விவகாரம், தமிழகத்தில் பெரும் புயலை ஏற்படுத்திவிட்டது. அதனால், ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டவர்கள் கடுமையாக எதிர்க்குரல் கொடுத்தார்கள்.


பா.ஜ.க.வினருக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டுமே என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தன் பங்குக்கு சூர்யாவுக்கு எதிராக கடுமையாக பேசினார். அது மட்டுமின்றி பல்வேறு நபர்கள் சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில்தான், அரசு ஆசிரியர்களை ஜோதிகா கேவலப்படுத்திவிட்டார் என்று, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சூர்யாவுக்கு காவல் துறை உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது, தேவையில்லாமல் கல்விக் கொள்கையில் இனிமேல் எதுவும் பேச வேண்டாம். நீங்கள் மட்டுமின்றி உங்களுக்கு ஆதரவாகவும் யாரும் களம் இறங்கக்கூடாது. அப்படியில்லை என்றால், காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் மீது திடீர் நடவடிக்கை எடுத்து, ஜோதிகாவை சிறையில் அடைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் சூர்யாவை மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறதாம். இனி, சூர்யா என்ன செய்யப்போகிறார் என்பதில்தான் இருக்கிறது, அவரது தனித்தன்மை.