எடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..?

சமீபத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் உள்ளாட்சி தொடர்பாக சந்தித்த நேரத்தில், அ.தி.மு.க. மட்டுமே ஸ்டாலினை திட்டிவருகிறது,


பா.ம.க. போன்று மற்ற கட்சியினரும் ஸ்டாலினை திட்ட வேண்டும் என்று அனைத்து கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டாராம்.

அதன் விளைவாகவோ என்னவோ இன்று உச்ச நீதிமன்றத்துக்குப் போக இருக்கும் ஸ்டாலினுக்கு பயம் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஜி.கே.வாசன். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அச்சம் கொள்கிறது. அதனால்தான் தேர்தல் நடத்தவிடக்கூடாது என்பதற்கான வழிவகைகளை தேடுகிறது , இது தவறான செயல். ஸ்டாலின் ஜனநாயக வழியில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் வாசன்.

அதே போன்று உள்ளாட்சி கூட்டணி தொடர்பாக கடந்த 2நாட்களாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருக்கிறது என்றும் வாசன் தெரிவித்துள்ளார். அதேபோன்று ஆளும் கட்சியைப் போன்றே, தமிழக தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.