நீதிபதி கிருபாகரனுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்..! மனிதாபிமானமாக முருகனுக்கு உதவ முடியாதா..?

ஏழு பேர் விடுதலைக்குத் தீர்மானம் போட்டுள்ளது தமிழக அரசு.


அதாவது ராஜீவ் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் ஆளும் அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு. அதே நேரம், முருகனின் தந்தை இறந்துபோன விவகாரத்தில், மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டுள்ளது தமிழக அரசு.

முருகனின் தந்தை இறந்து போன நிலையில், அவரது இறுதிச் சடங்கில் நேரடியாக பங்கேற்க முருகனால் முடியவில்லை. அதேநேரம், தன்னுடைய குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவும் சிறைந்த்துறை அனுமதிக்க வில்லை. இந்த நிலையில், இலங்கையில் உள்ள உறனர்களிடம் 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதி வேண்டி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் நீதிபதி கிருபாகரன் முன்பு வந்தது. அப்போது கிருபாகரன், ‘ஒருவருடைய அப்பா இறந்துவிட்டார். மகனால் நேரில் போக முடியவில்லை. அம்மாவிடமும் சகோதரியுடனும் தொலைபேசியில் பேச வேண்டும். மகன் நம் நாட்டில் சிறையில் இருக்கிறார். அவரால் பேச முடியுமா? முடியாதா? 

அவர் இந்தியராக இருந்தால் பேசலாம்; வெளிநாட்டவராக இருந்தால் பேச உரிமை இல்லை. இப்படி ஒரு நிலையை தமிழ்நாடு அரசு எடுத்திருப்பதாக இந்த செய்தி சொல்கிறது. அப்பாவின் மறைவு எல்லோருக்கும் ஒரேவிதமான உணர்வுகளையே தரும். ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மனிதர் இல்லை என்று ஆகிவிடுவாரா? மனித நேயத்துடன் அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் கண்டித்து இருக்கிறார். 

அதிகாரிகளுக்கு இருக்கும் நல்ல மனசு, அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.