விபச்சாரம் நடந்த இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து அழகிகள் இறக்குமதி! கோவை துடியலூர் அடுக்குமாடி குடியிருப்பில் விறுவிறு’ விபச்சாரம்!

கோவையில் துடியலூர்-சரவணம்பட்டி சாலையில் சட்டத்திற்கு புறம்பாக விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை உறுதிசெய்ய போலீசார் ஒருவர் மாறுவேடத்தில் உள்ளே சென்று விபச்சாரம் குறித்து வாடிக்கையாளர் போல பேசி விலை விபரங்களை கேட்டறிந்தார். இதன் மூலம் விபச்சாரம் நடப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அதன் பின்னர் விபச்சாரம் நடக்கும் பகுதியில் இருந்து வெளியே வந்த போலீஸ்காரர் மற்ற போலீசாருக்கு தகவலை அனுப்பியுள்ளார். உடனடியாக, உள்ளே சென்று 2 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவன் தப்பியோடி இருக்கிறான்.
சிக்கிய பெண்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மற்றும் இருவரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.