சேலம் மாவட்டடத்தில் வகுப்பறையில் மதுபானம் எடுத்து வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்த நாள் பார்ட்டி..! வகுப்பறைக்கு பீர் பாட்டிலுடன் வந்த மாணவிகள்! கண்டுபிடித்த ஆசிரியர்! பிறகு அரங்கேறிய பரிதாபம்! சேலம் திகுதிகு!
சின்ன சோரகை கிராமத்தை சேர்ந்த மாணவி நங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 15-ம் தேதி மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் மதுபான பாட்டில்களை வகுப்பறைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆசிரியர் வர மாணவிகள் கையில் மதுபான இருந்ததை பார்த்து கண்டித்தார்.
பின்னார் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் சேர்ந்து 5 மாணவிகளையும் கடுமையாகத் திட்டி தீவிர விசாரித்ததில் ஒரு மாணவியின் பிறந்த நாளை கொண்டாட மதுபானம் வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
பின்னர் வீட்டிலும் அந்த மாணவியை பெற்றோர் திட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால்அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வெளியில் தெரிந்தால் பிரச்சனை பெரியதாகும் என கருதி மாணவியின் சடலத்தை இரவோடு இரவாக தீ வைத்து கொளுத்தி விட்டார்கள்.
இந்த தகவல் நங்கவள்ளி கிராமத்தில் தீயாயை பரவ காவல்துறையின் கவனத்திற்கு பிரச்சனை சென்றது. இதையடுத்து பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவிகளுக்கு மதுபானம் யார் வாங்கிக் கொடுத்தது என்ற விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.