பக்கத்துல வந்தீங்க டிரஸ்ஸ கழட்டிடுவேன்! போலீசை அதிர வைத்த பெண்! அசர வைக்கும் காரணம்!

புனே: நிறுத்தியிருந்த வாகனங்கள் மீது காரை ஓட்டிச் சென்று இடித்த பெண் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


புனேவில் உள்ள ராம்நகர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, அதிகாலை 5.30 மணியளவில் இளம்பெண் ஒருவர் சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது திடீரென வேகமாக தான் ஓட்டி வந்த காரைக் கொண்டு இடித்தார். இதில் ஒருவரின் கார் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த காரின் உரிமையாளர் ஹின்ஜிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு, போலீசாருடன் அந்த பெண்ணை கைது செய்ய, அவரது வீட்டிற்கு அனைவரும் சென்றுள்ளனர். 

அப்போது, அப்பெண் ஆபாசமாக அனைவரையும் திட்டியதோடு, தனது ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு, பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் கொடுப்பேன் என மிரட்டியுள்ளார். பிறகு, ''எனது 2 கார்கள் வெளியேதான் நிற்கின்றன. தேவைப்பட்டால், பழிக்குப் பழியாக, என் காரையும் சேதப்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்று இஷ்டத்திற்கு பேசியுள்ளார்.

அப்பெண்ணின் கணவர் வந்து நஷ்டத்திற்கு பணம் தருவதாக கெஞ்சியுள்ளார். எனினும், சிசிடிவி வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதற்கிடையே, போலீசாரிடம் அவர் ஆபாசமாக நடந்துகொண்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.