கணவனை பிரிந்து இளைஞனுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்த பெண்! 3 இளைஞர்களால் பிறகு நேர்ந்த பயங்கரம்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக அவருடன் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து மூவரை  கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி 30,  தொழிலதிபரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சென்னை வந்து பல நாட்களாக ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார் தையடுத்து பல்வேறு பிரபலமான நிறுவனங்களில் டாட்டூ வரையும் கடையையும் நடத்தி வந்துள்ளார்.

கணவரை பிரிந்த இவர் தற்போது தனியாகத்தான் சென்னையில் வசித்து வந்தார் இந்நிலையில் 26 வயது இளைஞர் ஒருவர் அப்பெண்ணிற்கு பழக்கம் ஆகியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் வெளியே சென்ற நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிங்கி கழிவறையில் கொலை செய்யப்பட்ட கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அந்த நபர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தும் போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அப்போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப்பெண் தங்கியிருந்த அறைக்கு வருவதும் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகி இருந்தது. இந்நிலையில் அவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் அந்த இரு நபர்களையும் கைது செய்தனர் மற்றும் அவருடன் தங்கியிருந்த இளைஞர் மூவரையும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில் கணவரை பிரிந்து வாழ்வதால் கணவரை ஆளை வைத்து கொலை செய்திருக்கலாம் எனவும் அல்லது பணத்திற்காக இந்த கொலை நடந்துள்ளதால் எனவும் போலீசார் இரு தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.