மலச்சிக்கலால் துடித்த பெண்! ஹாஸ்பிடல் சென்ற போது வயிற்றுக்குள் இருந்த மர்ம பொருள்! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

தாய்லாந்து நாட்டில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் சுமார் 2000 சிறு சிறு கற்கள் இருந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பின்னர் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அவரது வயிற்றில் இருந்த கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.தாய்லாந்து நாட்டில் நாங் காய் மாகனத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீராத வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது அது என்னவென்றால் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் சுமார் 1898 சிறு சிறு கற்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதை உடனே அவர்களின் உறவினர்களுக்கு மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அகற்றுமாறு  அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சையை தொடங்க மருத்துவர்கள் வெற்றிகரமாக அவரது வயிற்றில் உள்ள கற்களை அகற்றியுள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்த இந்த அறுவைச் சிகிச்சையில் அவரது வயிற்று உள்ள அனைத்துக் கற்களும் அகற்றப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றும் அவரது வயிற்றில் எப்படி இவ்வளவு கற்கள் சென்றது என்பது குறித்து அப்பெண் கூறினாள் மட்டுமே வெளியே தெரிய வரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .தற்போது நோயாளி மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் எதுவும் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.