நடிகர் விஜய்யை பொது மேடையில் ஒரு பெண் சீண்டியது தற்செயலா, காரியமா? மருத்துவ மற்றும் தத்துவ விளக்கம்!

பிரபலங்களை சீண்டுவது உலகெங்கும் உள்ள நடைமுறைதான். நடிகைகளை பொது இடங்களில் சூழ்ந்துகொண்டு தொட்டுப்பார்ப்பதில் ஆண்களுக்கு அலாதி ஆனந்தம். அதேபோன்று பெண்களுக்கும் பிரபலங்கள் மீது ஒரு மயக்கம் இருப்பதுண்டு.


இது ஒரு மனவிகாரம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். எப்படியேனும் ஒரு பிரபலத்தை தொட்டுவிட வேண்டும் என்பது அவர்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். அதனால் தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் விளக்கம் சொல்கிறார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கிருஷ்ணபிரபு என்பவர் எழுதியிருக்கும் இந்த பதிவு வைரலாக செல்கிறது. படித்துப்பாருங்கள். நான் பேச வருவது நடிகர் விஜய்யின் மர்மத்தைத் தொடும் விஷயம் என்று நினைக்க வேண்டாம். இது உளவியல் சார்ந்த விஷயமும் அல்ல. மேலோட்டமான பார்வைதான்.

ஆரத்தழுவும் அந்தப் பெண்ணுக்கும் விஜய் என்பவர் விஸ்வரூபம்தானே! பெண்கள் முதல் வாலிப வயது வரையிலான ஆண்கள் ஓர் ஆண் நடிகரைப் பார்க்க முட்டி மோதுகிறார்கள். ஓர் ஆணின் மீது ஆண்கள் மயக்கம் கண்டு மோதுகிறார்கள். விஷயம் அடிதடி, லத்தி சார்ஜ் வரை சென்றுள்ளது.

அந்தப் பெண் உள்நோக்கத்துடன் அவ்வாறு செய்ததுபோல் தெரியவில்லை. ஏதோ ஒன்று தெரியாமல் அதன் இயல்பில் நடந்துவிட்டது. தெரிந்தே செய்திருந்தாலும் தப்பா என்ன!? இதுபோன்ற வசியங்கள்தானே உயிர்களின் ஆதாரம். பேருந்து, ரயில், கோவில் நெரிசலில் இதுபோல உங்களுக்கு நிகழ்ந்ததில்லையா என்ன!? இந்த லட்சணத்தில் இது பெரியார் பூமியாம்! மோடி மஸ்தான்களை விரட்டப் போகிறார்களாம். நல்லதுதான்...

மரபுகளை மீறாத, பழைமைவாதத்தில் ஊறிய, எல்லாம் பகடியென நினைக்கும் ஒரு போக்கில் அட்டகாசமாக இப்படித்தான் எல்லாமும் நடக்கும். பகடிகள் அப்படித்தான் பெருவெளியென உருப்பெருகின்றன. பஃபூன்கள்தான் எல்லாத் துறையிலும் ஆளுமைகள் என வலம் வருகிறார்கள். நின்று நிதானித்தால் எல்லாம் புரியும்.

இடுக்குவழி(யில்) நெடுஞ்சுவரின் விட்டத்தை அளப்பதுபோல எல்லாமும் இங்கு நடக்கிறது. அந்தப் பெண் வந்து நிற்கும் கோணம், விஜய் நிற்கும் கோணம், அந்த உச்ச நடிகரைக் கடந்து செல்லும்போது அப்பெண்ணின் முக பாவம் எதுவும் எனக்குக் கோணலாகத் தெரியவில்லை.

நாம் நுட்பங்களை நூலிழையில் தவறவிடுகிறோம். யதார்த்தத்தைத் தவறவிடுகிறோம். அதன் வழி எல்லாவற்றையும் தவற விடுகிறோம். கலை, இலக்கியம், இசை, கிராமியக் கலை என எல்லாவற்றிலும் நுட்பத்தைத் தவற விடுகிறோம். போலிகளை உண்மை என நம்புகிறோம். சுயமாகத் தற்பெருமை பேசியும், பொதுவாக ஓர் மாயையை உண்டாக்கியும் ஒரு மயக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, நாம் இடுக்கு வழியில் பார்ப்பதையே உலகம் என்று நம்புகிறோம். ஆனால் அப்படி அல்ல. நாம் உண்மையிலேயே இது பெரியார் பூமிதானா என்று சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அடப்பாவமே, இதுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தமோ..?