தடல் புடலாக நடந்த திருமண ஏற்பாடு..! கிணற்றில் சடலமாக கிடந்த 21 வயது இளம் பெண்! காரணத்தை கூறி கதறும் தாய்!

ஏற்கனவே நிறைய கடன் இருக்கும் சூழலில் தனது திருமணத்திற்காக தாயார் மேலும் கடன் வாங்கியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மற்றும் மோகனா தம்பதியினர். இவர்களுக்கு சத்யா என்ற 21 வயது மிக்க இளம்பெண்ணும், 18 வயதில் பிரவீன்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்   

குடும்பத்தை காப்பாற்ற கோவை வந்த மோகனா. விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இதற்கிடையில் சத்யாவிற்கு மாப்பிள்ளை நிச்சயம் ஆனதால் திருமணத்திற்காக கடன் வாங்கியுள்ளார். 

ஏற்கனவே இவர்களுக்கு நிறைய கடன் இருக்கும் சூழலில் தற்போது தனது திருமணத்திற்கும் எதற்காக மேலும் கடன் வாங்குகிறீர்கள் என சத்யா தாயார் மோகனாவை திட்டியுள்ளார்.  

மனமுடைந்து காணப்பட்ட சத்யாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதன்பிறகு, வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பதறியடித்து ஓடிப்போன மோகனா, சத்யா இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார்.  

பிறகு இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சத்யாவின் உடலை மீட்டு இருக்கின்றனர்.  

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது உண்மையிலேயே தற்கொலையா? இல்லை, வேறு யாரேனும் கொலை செய்திருக்கக் கூடுமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.