முதலில் காதலி! பிறகு காதலன்! அடுத்தடுத்து பறிபோன உயிர்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயமான காதல் ஜோடி ஒன்று தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயம் ஆன நிலையில் அவரது காதலி குடும்பத்தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிந்த ராணுவ வீரர் வீட்டிற்கு வருவதாக கூறி தனது காதலி  இறந்ததையடுத்து தானும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் இவர் அசாமில் உள்ள முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு 15 நாட்கள் விடுமுறைக்காக வந்துள்ளார். அப்போது நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது உறவுக்கார பெண்ணை அவருக்கு மணம் முடிப்பதாக நிச்சயம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தனது வருங்கால மனைவியிடம் ராஜமாணிக்கம் தினமும் செல்போனில் பேசியும் குறுஞ்செய்திகள் அனுப்பியும் வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் பத்திரிகையும் அடித்து உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அன்று பெண்ணின் வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தசெய்தி கேட்டதும் மனமுடைந்த ராஜமாணிக்கம் வீட்டிற்கு வருவதாக விமான டிக்கெட் எடுத்து விட்டு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இதையடுத்து அவரது உடல் ராணுவ மரியாதை செய்த பிறகு பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டது.

காதலி இறந்த செய்தி கேட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருந்த ராணுவ வீரனின் உண்மையான காதலை வெளிப்படுத்த இவ்வாறு தான் செய்ய வேண்டுமா என பெற்றோர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி உள்ளனர்.