பள்ளிக்குள் நுழைந்து திடீரென ஆசிரியர் கழுத்தில் கத்தி! மாணவிக்காக இளைஞன் செய்த விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

கன்னியாகுமரியில் ஆசிரியர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர்களை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.


 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த இரணியல் தனியார் பள்ளியில் 15 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் படித்து வருகிறார். தினமும் அவர் பள்ளிக்கு தனது ஆசிரியர் உடனே சென்று வருவது வழக்கம். அந்த வகையில் ஆசிரியருடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் 23 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியின் தந்தை இறந்து விட்டதாகவும் அதனால் அவளை எங்களோடு அனுப்பி வைக்குமாறும் ஆசிரியரிடம் கூறினர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த ஆசிரியர் மாணவியை அவர்களுடன் அனுப்ப மறுத்துள்ளார் ஆத்திரம் அடைந்த நபர்கள் ஆசிரியரின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து மிரட்டி மாணவியை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து ஆசிரியர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் பைக்கில் சென்ற மர்ம நபர்களை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.

பின் ஏன் மாணவியை கடத்திச் செல்கிறீர்கள் என்று கேட்ட பொழுது நான் கடத்தி செல்ல வில்லை ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து கூரிய கத்தி இரு சக்கர வாகனங்கள் உடன் அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் இதற்கு முன்பாக மாணவியை ஏற்கனவே கடத்திச் சென்று ஹைதராபாத் பகுதியில் பத்து நாள் வைத்து குடும்பம் நடத்தியதாகவும் பின் மைனர் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.