மாணவியை காதல் வலையில் வீழ்த்திய 2 பிள்ளைகளின் தந்தை! ஆபாச படமும் எடுத்து மிரட்டிய விபரீதம்!

பேஸ்புக் காதலால் இளம் பெண்கள் வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவியகள் சமூக வலைதளங்களில் தங்களின் பொழுதைக் கழிப்பது எளிதாகிவிட்டது.  இந்நிலையில் அதிக அளவில் பேஸ்புக் காதலால் தங்களது வாழ்க்கையை இழந்த பெண்கள் பலர். இதேபோல் ஈரோடு பகுதியில் பேஸ்புக் மூலம் அறிமுகமான லாரி ஓட்டுனரை நம்பி தனது வாழ்க்கையை இழந்துள்ளார் மற்றொரு பெண்.

ஈரோடு மோசிகீனார் வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னே  இதய நோய் காரணமாக  இறந்துவிட்டார். இந்நிலையில்  கணவரை பிரிந்து தனது மகளை வளர்த்து வந்துள்ளார். தனது மகள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மகளுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் நிதி பெற்று செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். செல்போன் வாங்கியதும் பேஸ்புக்கில் இணைந்துள்ளார் அந்தப் பெண். பின்னர் சிறிது நாட்கள் சென்ற நிலையில் அதே பகுதியில் லாரி ஓட்டுநரான செல்லதுரை என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த செல்போனால் மகளின் வாழ்க்கையே சீரழியப்போகிறது என்பது  தெரிந்திருக்கவில்லை. புதிதாக செல்போன் கிடைத்த மோகம் மாணவியை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல் பேஸ்புக்கில் மூழ்கடித்துள்ளது. பேஸ்புக் மூலம் செல்லத்துரை என்பவருடன் முதலில் நட்பாக பேசி வந்துள்ளார் சிறிது நாட்கள் செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  கண்டிக்க யாரும் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி பேஸ்புக் காதலன் செல்லுத்துறையுடன் சென்றுள்ளார்.  அவருடன் குடும்பம் நடத்திய மாணவி பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், செல்லதுரைக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது என்ற  விசயம் தெரியவரவே மாணவி அதிர்ச்சியடைந்தார்.

ஏமாற்றமும் கண்ணீருமாய் தாய்வீட்டுற்கு சென்ற மாணவிக்கு அடைக்கலம் கொடுத்தார் தாய் விஜயலட்சுமி. இதனிடையே தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு  ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் செல்லத்துரை. புகாரை விசாரித்த போலீசாரிடம் விஜயலட்சுமி கூறியதாவது செல்லத்துரை தன் மகளை ஏமாற்றியது மற்றும் ஆபாச படம் எடுத்து மிரட்டியது, என பல குற்றச்சாட்டுகளை தெரிவிக்க செல்லதுரையை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

விஜயலட்சுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து  மது அருந்திவிட்டு போதையில் கையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்தனர். பல மணி நேரத்திற்கு பின்னர்அங்கு ​வந்த  போலீசார் செல்லதுரையை காவல்நிலையம் அழைத்து சென்றனர்.  அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.